அன்புள்ளம் கொண்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கம். என்னுடன் பணிபுரியும் எனது நண்பர் மூலம் வலையுலகம் எனக்கு அறிமுகமானது. எனக்கென ஒரு வலைப்பூவை தொடங்க முயன்று பலமுறை வேண்டாம் என்று தள்ளிப்போட்டேன். காரணம், இலக்கணப்பிழையின்றி என்னால் தமிழில் எழுதுவது என்பது கொஞ்சம் கடினம். குறில், நெடில் எனக்கு எப்போதும் கோணல் தான். முடிந்தவரையில் பிழையின்றி எழுத முயற்சிக்கிறேன்.
எனது பெயர் மாதவன். நான் கணிப்பொறி துறையில் வேலைசெய்யும் கோடிகளில் ஒருவன். பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை என்னும் கிராமம். பட்டயபடிப்பு இளங்கலை அறிவியல் கணிதம் மற்றும் முதுநிலை கணிப்பொறி அறிவியல் - பாரதிதாசன் பல்கலைகழகம்.
பணி நிமித்தமாய் சென்னையில் சில வருடங்கள். தற்போது பணிபுரிவது சவ்தி அரேபியாவில். வேலைசெய்வது finance டொமைன்.
நியான்லைன்ஸ் (நீ ஆன்லைன்ஸ் இல்லை) என்பதற்கு எந்த பெயர் விளக்கமும் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த ஆங்கிலச்சொல் (காரணப்பெயர்).
உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களையும் எனக்கு மின்னஞ்சல் செய்ய neonlines@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும்.
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
மாதவன் (நியான்லைன்ஸ்)
செவ்வாய், 9 டிசம்பர், 2008
எனது அறிமுகம்...
இடுகையிட்டது
Madhavan
நேரம்
3:40 PM
0
கருத்துகள்
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்:
அறிமுகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)