
"பிடிச்சிருக்கு"
நீ சொல்லும் இந்த
ஒற்றை வார்த்தைக்காக தான்
கடல் கூடும்
ஆற்றுத்தண்ணியிலிருந்து
கொஞ்சம்
உப்பு சேராத
ஊரணியிலிருந்து
கொஞ்சம்
தெப்பம் மிதக்கும்
திருக்குளத்திலிருந்து
கொஞ்சம்
ஆட்டம் போடும்
அருவியிலிருந்து
கொஞ்சம்
சேர்த்து சேர்த்து
ஆவியாக்கி
அதனுள் பொதிகைமலை
சாரல் கோர்த்து
அந்தி மழையாக்கி
அதிலிருந்து சிலதுளி
பிரித்தெடுத்து
வார்த்தைகளாக்கி
தெளித்துள்ளேன் - இந்த
பூக்களின் மீது . . .
- மாதவன்
3 கருத்துகள்:
கற்பனை வளம் பிரமாதம்ங்க!
வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஷீ-நிசி அவர்களே!!
அழகான படம். அதற்கேற்ற வரிகள். அட்டகாசமான கவிதை.
கருத்துரையிடுக