சனி, 10 ஏப்ரல், 2010

கனவு காணுங்கள்

வாழ்கையில் சிலவற்றை
அடையுமுன்
கனவுகளில் கொண்டுவந்து
கவிதையாக்கிப் பாருங்களேன்!!

சொர்க்கத்தின் சுவடுகளையும்
சோகத்தின் நிஜத்தையும்
சொந்த கதையையும் சேர்த்து
சிறிது நேரத்திற்கு காணுங்கள்!!

கண் சிமிட்டும் நேரத்திற்குள்
கண்ணுக்குள் கானகத்தை
கொண்டுவந்து பாருங்கள்!!

பக்கத்து வீட்டு குழந்தையின்  சிரிப்பு,
பருவமடைந்த மலர்,
பனித்துளி சூடிய இளந்தளிர்,
படரத் தவிக்கும் அவரைக்கொடி,
பாதி கலைந்த வானவில்,
பாலைவனத்து தனிமரம்,
பால்வடியும் தென்னங்குருத்து,
பாடும் குயில், படரும் மயில்,
தேடும் நிலவு, தெவிட்டாத தென்றல்,
தேரின் சக்கரம், தேனியின் ரிங்காரம்,
பாதிபாதியாய் கண்டு பாருங்களேன்!!

தென்றல் தழுவும் சுகம்
தெரியுமா உங்களுக்கு?
பெய்யாத மழையில் நனையத் 
தெரியுமா உங்களுக்கு? 

இனி இவைகளையும் 
காணுங்கள் சில நாட்களுக்கு!!
அவைகளுடன் - 
சேர்த்துக் கொள்ளுங்கள் 
உங்கள் காதலையும் - 
விடியல் சூரியன் 
கவிதையுடன் உங்களை 
காலையில் எழுப்பும்!! 
                                                      -மாதவன்