செவ்வாய், 21 ஏப்ரல், 2009

உந்தன் முகம் தான் தெரிகிறதடி!!






தொட்டுப்பேசும் வண்ணத்துப்பூச்சி
பட்டுத்தெறிக்கும் நீர்த்துளி

பனித்துளியில் ஒருதுளி
பள்ளம் சேரும் மழைத்துளி


பருவமடையா நாணல்
பருவமடைந்த தென்னங்குருத்து


வானத்தில் படரும் வானவில்
வாடாத மலரின் நடுஇதழ்


கருவுற்றிருக்கும் மொட்டு
செறிவேற்றிருக்கும் மெட்டு

காதலுடன் பாடும் குயில்
காமத்துடன் ஆடும் மயில்


கவிதைச் சொல்லும் தென்றல்
தென்றல் தடவும் நாற்றங்கால்


தொட்டிலில் துயிலும் குழந்தை,
குழந்தை சிதறும் சிரிப்பு


அந்தி வானம் தொடும் ஆதவன்
ஆடாமல் அசையும் அவரை


சுற்றும் காற்று, சுழலும் நெருப்பு
படரும் கொடி, தொடரும் மேகம்


மேகம் தேடி ஒளியும் முழுமதி
மோகம் கொண்டு சீறும் நாகம்


காலையில் விழிக்கும் கதிரவன்
மாலையில் மலரும் மல்லிகைப்பூ


எங்கு பார்த்தாலும்...
எதில் தேடினாலும்...


எனைச் சுற்றி உள்ளவை யாவிலும்
உந்தன் முகம் தான் தெரிகிறதடி!!






6 கருத்துகள்:

எட்வின் சொன்னது…

//கருவுற்றிருக்கும் மொட்டு
செறிவேற்றிருக்கும் மெட்டு//

அருமை.

நல்லா வந்திருக்குங்க. வாழ்த்துக்கள்

Madhavan சொன்னது…

@எட்வின்
வருகைக்கு நன்றி நன்பரே!!

Suresh சொன்னது…

//
வானத்தில் படரும் வானவில்
வாடாத மலரின் நடுஇதழ்

கருவுற்றிருக்கும் மொட்டு
செறிவேற்றிருக்கும் மெட்டு
காதலுடன் பாடும் குயில்
காமத்துடன் ஆடும் மயில்/

அருமை மாதவா :-)

Madhavan சொன்னது…

@சுரெஷ்
தங்கள் வருகைக்கு நன்றி!!

துபாய் ராஜா சொன்னது…

வர்ணனைகள் அருமை.

//பருவமடையா நாணல்
பருவமடைந்த தென்னங்குருத்து

வானத்தில் படரும் வானவில்
வாடாத மலரின் நடுஇதழ்

கருவுற்றிருக்கும் மொட்டு
செறிவேற்றிருக்கும் மெட்டு
காதலுடன் பாடும் குயில்
காமத்துடன் ஆடும் மயில்

கவிதைச் சொல்லும் தென்றல்
தென்றல் தடவும் நாற்றங்கால்

தொட்டியில் துயிலும் குழந்தை,
குழந்தை சிதறும் சிரிப்பு

அந்தி வானம் தொடும் ஆதவன்
ஆடாமல் அசையும் அவரை

சுற்றும் காற்று, சுழலும் நெருப்பு
படரும் கொடி, தொடரும் மேகம்

மேகம் தேடி ஒளியும் முழுமதி
மோகம் கொண்டு சீறும் நாகம்

காலையில் விழிக்கும் கதிரவன்
மாலையில் மலரும் மல்லிகைப்பூ

எங்கு பார்த்தாலும்...
எதில் தேடினாலும்...

எனைச் சுற்றி உள்ளவை யாவிலும்
உந்தன் முகம் தான் தெரிகிறதடி!!//

அட்டகாசமான வரிகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Madhavan சொன்னது…

@துபாய் ராஜா
தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி!!