சனி, 12 ஜூன், 2010

பெண்ணின் பருவங்கள்

குறிப்பு - சங்க காலத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக பிரிக்கப்பட்டுள்ளது .அவைகள்  பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.
                  ஒவ்வொரு பருவமும்  முன்று வருடங்களை கொண்டது.  
ஒவ்வொரு பருவத்தைப் பற்றியும் சில வரிகளில்....  


பேதை அவள் தோன்றும் போதே
பெருமை சேர்க்கிறாள்
பிரிதொரு தோன்றலுக்கு
பிம்பமாய்...


பெதும்பை எனின் போதினும்
பொதிகைமலை தென்றலை
பொதியை சுமக்க
புதிதாய் பூக்கிறாளே...


மங்கை அவள்
மனதிற்குள் தேக்கிவைத்திருக்கிறாள்
மின்னல் ஒன்று
மழைசாரலோடு.
இதயத்தோடு இணைத்து
இணைத்து தைத்திருக்கிறாள்
இதமாய் தொடங்கும்
உதயம் ஒன்று...


மடந்தையும் -
மண்ணில் மவுனத்தோடு  
மறைத்து வைத்த
விதையும் -
வீரியமற்று தான் போய்விடுமா...
தளிர் விடாமல் தலைகுனியுமா...
தரணி பார்க்காமல் போய்விடுமா...


அரிவை அவள்
அன்று முதல்
அடங்கும் வரை
அடங்கியும் இருப்பாள்
அடக்கியும் பார்ப்பாள்


தெரிவை... தெரிவை...
ஆறாவது பருவத்தினுள்
ஆரவாரத்துடன் தான் நுழைகிறாள் -
அந்தி வானத்து அழகுடன்
அன்று மலர்ந்த மல்லிகையாய்
அர்த்தமுள்ள சிரிப்புடன்...


பேரிளம் பெண் -
பருவத்தினுள்
பக்குவப்பட்டது,
பாசத்திற்கு ஒரு 
வாசம் சேர்த்து 
கொடுத்துக் கொண்டேயிருக்கும்
அமுத சுரபியோ
அந்த பருவம்...


பெண் - சொற்களில்
அர்த்தங்கள் ஆயிரம்
ஆனால் - ஆதாரமே
அந்தச் சொல்தானோ?
  
தோன்றலில் - பெண்
தொடக்கத்தில் - பெண்
பாசத்தில் - பெண்
பணிவில் - பெண்
கனிவில் - பெண்
கருவில் - பெண்
அழிவில் - பெண்
ஆக்கத்தில் - பெண்
வெற்றியில் - பெண்
வீரத்தில் - பெண்
தோல்வியில் - பெண்


பெண்ணுக்கு பெண்தான்
உருவக அணியோ?


                           - மாதவன்

4 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//பெண் - சொற்களில்
அர்த்தங்கள் ஆயிரம்
ஆனால் - ஆதாரமே
அந்தச் சொல்தானோ? //


அருமை. வாழ்த்துக்கள்

Madhavan சொன்னது…

thangal varukaikkum karuththukkum mikka nanRi saravanan avargale...

அன்புடன் நான் சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க....

நீங்க, கூகுள்-ல ”NHM WRITER” பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.... அது மிக எளிமையாக தமிழில் எழுத உதவும்.... எப்படி பதிவிறக்கம் செய்வது எப்படி பயன்படுத்துவது என்ற விபரம் அதிலேயே இருக்கிறது.
முயற்சி செய்யுங்கள்.

//thangal varukaikkum karuththukkum mikka nanRi saravanan avargale...//

இப்படி ஆங்கிலத்தில் அடித்தால் அப்படியே தமிழில் வந்துவிடும்.

நன்றி,

Madhavan சொன்னது…

thanks mr. karunakarasu... I ll download it immediately.